ஆப்நகரம்

கனிஷ்க் நிறுவனத்தின் ரூ. 281 கோடி சொத்துக்கள் முடக்கம்!

வங்கிகளில் 824 கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோச செய்த வழக்கில், கனிஷ்க் நகைக்கடைக்கு சொந்தமான 281 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Jun 2018, 10:33 pm
வங்கிகளில் 824 கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோச செய்த வழக்கில், கனிஷ்க் நகைக்கடைக்கு சொந்தமான 281 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil kanishk bubesh kumar


சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் உரிமையாளா் பூபேஷ் குமார் மற்றும் அவரது மனைவி நீதா ஆகியோர் 14 வங்கிகளில் 824.15 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கியதாகவும். அதனை திரும்ப செலுத்தவில்லை என்றும் எஸ்.பி.ஐ. வங்கி சி.பி.ஐ.யிடம் புகார் அளித்தது.

புகாரின் அடிப்படையில் கனிஷ்க் நிறுவன உாிமையாளா் பூபேஷ் குமாா் மீது சி.பி.ஐ. அதிகாாிகள் வழக்கு பதிவு செய்தனா். பூபேஷ் குமாா் உள்பட சிலாிடா் சி.பி.ஐ. அதிகாாிகள் பெங்களூருவில் விசாரணை நடத்தினா்.

இதனைத் தொடா்ந்து கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.84 கோடி மதிப்புள்ள சொத்துகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையால் முடக்கம் செய்யப்பட்டது. மேலும், அந்நிறுவனத்தின், ரூ.143 கோடி வங்கி கணக்கை அமலாக்கத் துறையினா் முடக்கம் செய்யப்பட்டது. கனிஷ்க் நகைக்கடை நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே 143 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான 138 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரையில் மொ்தம் 281 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அடுத்த செய்தி