ஆப்நகரம்

எடப்பாடி பழனிசாமி அரசின் 2 ஆண்டு நிறைவு விழா- சாதனை மலர் வெளியீடு

சென்னை: எடப்பாடி கே பழனிசாமி தமிழக அரசின் முதல்வராக பொறுப்பேற்று இரண்டாண்டுகள் முடிவடையும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனை விளக்க புத்தகம் வெளியிடப்பட்டது.

Samayam Tamil 15 Feb 2019, 4:02 pm
எடப்பாடி கே பழனிசாமி தமிழக அரசின் முதல்வராக பொறுப்பேற்று இரண்டாண்டுகள் முடிவடையும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனை விளக்க புத்தகம் வெளியிடப்பட்டது.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி அரசின் 2 ஆண்டு நிறைவு விழா


கடந்த 2017, பிப். 16ம் தேதி எடப்பாடி கே பழனிசாமி தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அவரது இரண்டாண்டுகள் ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை விளக்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் விழா மலர் வெளியிடும் விழா இன்று நடைபெற்றது.


அதன்படி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் இந்த அரசு அறிவித்த பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை, பொங்கல் பரிசு திட்டம் ஆகியவை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் எடப்பாடி கே பழனிசாமி தலைமையிலான அரசு இராண்டாண்டுகளை பூர்த்தி செய்வதையொட்டி, அரசின் சாதனைகளை விளக்கும் விழா மலர் வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழா மலரை வெளியிட, அதை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட செயலக அதிகாரிகள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதற்காக விழா நடைபெற்ற தலைமைச் செயலக பகுதிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வந்து செல்லும் பகுதிகள் முழுவதும் மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அடுத்த செய்தி