ஆப்நகரம்

அதிமுகவில் யார் அடுத்த சிஎம் வேட்பாளர்? நெல்லை பக்கம் உறுதி தகவல்...

எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்வர். அவரை மீண்டும் முதல்வராக்க அதிமுக எந்த நிலையிலும் தயாராக உள்ளது ; நெல்லையில் கட்சியின் அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன் பரபரப்பு பேட்டி

Samayam Tamil 13 Aug 2020, 3:12 pm
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சையான கருத்து அக்கட்சியினரிடையே பரப்பப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராக வர வேண்டும் என்று கோரி நெல்லையில் அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
Samayam Tamil eps and ops


இதுகுறித்து அதிமுக அமைப்புச் செயலாளரும் நெல்லை மாவட்ட ஆவின் தலைவருமான சுதா பரமசிவன் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், '' எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக அதிமுக எந்த நிலையிலும் தயாராக உள்ளது. ஏன் என்றால் இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்பற்ற முதல்வராக செயல்பட்டு நோயிலிருந்து எப்படி மக்களை பாதுகாக்க வேண்டும் என்று சிறப்பாகக் செயல்படுகிறார்.

'' ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியையும் ஆட்சியையும் கட்டி பாதுகாத்து வருகிறார் இந்தியாவின் ஒப்பற்ற முதல்வராகவும் எடப்பாடி உள்ளார். எனவே அவர்தான் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று பொதுமக்களும் ஆசைப்படுகிறார்கள். திமுக எந்த சூழலிலும் ஆட்சிக்கு வராது.


'' ஸ்டாலின் என்றும் முதல்வராக வர முடியாது மக்கள் திமுகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தான் மீண்டும் முதல்வராக எம்ஜிஆர் ஜெயலலிதா ஆசி உள்ளது. கட்சிக்குள் எந்த போட்டியும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வர எந்த மாற்று கருத்தும் இல்லை. அதிமுகவில் சாதாரண தொண்டனும் பெரிய பதவிக்கு வரமுடியும். ஜெயலிதா இந்த இயக்கத்தை அவ்வாறு உருவாக்கியுள்ளார்.

ஆசிரியர்களுக்கு 6 ஆண்டுகளாக வேலை தராமல் இருக்கும் தமிழக அரசு - சீமான்

'' எல்லோரும் கட்சியை ஒழித்துவிடலாம், ஆட்சியை ஒழித்துவிடலாம் என்று நினைத்தார்கள். ஆனால், அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. எனவே இரட்டை இலை தான் வரும் தேர்தலில் வெற்றிபெறும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றார். தொடர்ந்து பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று அக்கட்சியை சேர்ந்த விபி.துரைசாமி கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு, அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். நாங்கள் யாரையும் தேடிப் போக மாட்டோம். அவர்கள் தான் எங்கள் தலைமையில் வருவார்கள் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி