ஆப்நகரம்

அதிமுக பொதுக்குழு: உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் கோரிக்கை!

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது

Samayam Tamil 4 Jul 2022, 12:56 pm
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக, ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் பெரிதான நிலையில், அதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொதுக்குழுவுக்கு தடை கோரி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Samayam Tamil எடப்படி பழனிசாமி
எடப்படி பழனிசாமி


அதன் மீது விசாரணை நடத்திய தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை. திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை. பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியதும் கட்சிதான். எனவே, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.” என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு கூட்டம் நடத்தலாம். ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் மீது மட்டும் ஆலோசித்து முடிவெடுக்கலாம். மற்ற புதிய தீர்மானங்களில் ஆலோசித்தாலும் அதன் மீது எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டது.

அதிமுக இரண்டுபட்டால் பாஜகவுக்கு கொண்டாட்டம்? அமித்ஷா போடும் பக்கா பிளான்!

இந்த உத்தரவை எதிர்த்து இபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையேற்று, உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நாளை மறுநாள் விசாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி அனுமதியுடன் நாளை மறுநாள் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த செய்தி