ஆப்நகரம்

பென்ஸ், ஆடி, ஜாகுவார் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் அழைப்பு..!

தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு 11 வாகன நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 4 Jun 2020, 6:21 pm
தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய ஜெனரல் மோட்டார்ஸ், பென்ஸ், பிஎம்டபிள்யூ, டெஸ்லா, ஜாகுவார், டொயோட்டோ, ஆடி, ஃபோகஸ்வேகன் உள்ளிட்ட உலக முன்னணி மோட்டார் வாகன நிறுவனத் தலைவர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil முதல்வர் பழனிசாமி



அக்கடிதத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் எனவும் தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள சாதக அம்சங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது திரும்பப் பெறுவது? - முழு விவரம் இதோ!!


கடந்த சில தினங்களுக்கு முன்னதாக விமான நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அவர் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வாகன நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் நேரடி அழைப்பு விடுத்து நிறுவனத் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்த செய்தி