ஆப்நகரம்

கிருஷ்ணசாமி மனைவிக்கு முதல்வர் ஆறுதல்

மாரடைப்பால் இறந்த நீட் தேர்வு எழுதிய மாணவர் தந்தை கிருஷ்ணசாமியின் மனைவிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.

Samayam Tamil 6 May 2018, 5:20 pm
சென்னை: மாரடைப்பால் இறந்த நீட் தேர்வு எழுதிய மாணவர் தந்தை கிருஷ்ணசாமியின் மனைவிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.
Samayam Tamil CM_15486


மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் கேரளா சென்று நீட் தேர்வு எழுதியுள்ளார். அங்கு உடன் வந்த மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் இறந்தார். அவரது இறப்புக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கிருஷ்ணசாமியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அளித்து உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். “மறைந்த கிருஷ்ணசாமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்காக அரசு தரப்பில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேரள தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.” என்றும் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் எடுத்து வருவதற்காக தமிழக அரசின் சார்பில் ஒரு குழு கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மாணவரின் தாயார் பாரதி மகாதேவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தமும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்ததாகவும் முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் கல்விச் செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என்று அவரது தாயாருக்கு உறுதி அளித்ததாகவும் அவர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

அடுத்த செய்தி