ஆப்நகரம்

மீனவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு ரூ.20 லட்சமாக உயர்வு

ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை தலா ரூ.20 லட்சமாக அதிகரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

TNN 12 Dec 2017, 5:03 pm
கன்னியாகுமரி: ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை தலா ரூ.20 லட்சமாக அதிகரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Samayam Tamil edappadi palanisamy has announced hike in relief funds for fishermen families affected by ockhi
மீனவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு ரூ.20 லட்சமாக உயர்வு


அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சூறையாடிய ஓகி புயலால் ஏராளமான மீனவர்கள் காணாமல் போன நிலையில், விவசாயிகளும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நேற்று விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இன்று கன்னியாகுமரி தூத்தூர் சென்று மீனவர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உரையாடிய அவர், அவர்களின் குறைளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து புயலில் சிக்க உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமாக அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டார்.

மேலும், மீனவர்களின் மறுவாழ்வுக்கான நிதி உதவியை ரூ.2500லிருந்து ரூ.5000ஆக உயர்த்தியுள்ளார். இந்த தொகை சுமார் 31 ஆயிரம் மீனவர்களுக்குக் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி