ஆப்நகரம்

ரஜினிக்கு தூது விட்ட எடப்பாடி: அந்த மாதிரி முடிவெடுத்துடாதீங்க!

எடப்பாடி பழனிசாமி முக்கிய தகவல் ஒன்றை நடிகர் ரஜினிகாந்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 14 Dec 2021, 6:53 pm
அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் தீவிரம்காட்டும் சசிகலா கடந்த வாரம் திடீரென ரஜினிகாந்தை சந்தித்தது அரசியல் அரங்கில் பேசுபொருளானது.
Samayam Tamil edappadi palanisamy rajini


உடல் நலத்தை விசாரிக்க சென்றதாகவும், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்து சொல்ல சென்றதாகவும் சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் அந்த சந்திப்பில் நடந்தது என்ன என்ற கேள்வி எழுந்தது.

பாஜக டெல்லி தலைமை சசிகலா மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த கோபத்தை தணிக்க வேண்டும் என்பதற்காகவே ரஜினிகாந்தின் உதவியை சசிகலா நாடியதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த அதற்கு பிடி கொடுக்கவில்லை என்றும் லதா ரஜினிகாந்த் தான் சசிகலாவுக்கு ஆறுதலாக பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஒன்பது நாள்கள் பள்ளிகள் விடுமுறை: வெளியாகும் அறிவிப்பு?
சசிகலாவின் ரஜினிகாந்த் சந்திப்பு எடப்பாடி பழனிசாமியை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளதாம். இது குறித்து அதிமுக தலைமைக் கழக வட்டாரத்தில் முக்கிய புள்ளி ஒருவரை ஓரம் கட்டு விசாரித்தோம்.

“பாஜகவுடன் சசிகலாவுக்கு தொடர்பு ஏற்பட்டுவிடக்கூடாது, அப்படி நிகழ்ந்துவிட்டதால் நிலைமை தலைகீழாகிவிடும் என்பது எடப்பாடி பழனிசாமி நன்றாகவே தெரியும். தற்போதைய நிலவரப்படி சசிகலாவை கொண்டு வருவதில் பாஜகவுக்கு விருப்பமில்லை. ஆனால் சசிகலா தொடர்ந்து டெல்லியின் கவனத்தை திருப்ப முயற்சித்து வருகிறார். ரஜினியை அதற்கான கருவியாக சசிகலா பயன்படுத்த முயற்சித்தது எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஓபிஎஸ், இபிஎஸ் மீண்டும் லடாய்: ஓடம் கரை சேருமா?
இதைக் கேள்விபட்டதும் ரஜினிக்கு நெருக்கமான ஒருவரை அழைத்தார். அவர் எடப்பாடி பழனிசாமிக்கும் வேண்டப்பட்டவர் தான். அவரிடம் ரஜினிகாந்துக்கு முக்கிய தகவலை பாஸ் செய்துள்ளார். ‘சசிகலாவை நீங்கள் எக்காரணம் கொண்டும் நம்ப வேண்டாம். தனிப்பட்ட முறையில் அவரோடு நட்பு பாராட்டுவது பிரச்சினை இல்லை. ஆனால் அதிமுக இணைப்பிற்காக அவர் சொல்லும் வார்த்தைகளுக்கு செவி கொடுக்க வேண்டாம். அதிமுக நலனுக்காக மட்டுமல்ல, உங்கள் நலனுக்காகவும் சொல்கிறேன், உங்கள் நற்பெயரை அவர் கெடுத்துவிடுவார்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்ல அந்த நபரும் ரஜினியிடம் இதை தெரியப்படுத்தியுள்ளார்.
மழலையர் வகுப்புகள் தொடக்கம்: என்ன முடிவெடுக்கிறது தமிழக அரசு?
எடப்பாடி பழனிசாமியின் அறிவுரைக்கு, ‘மிக்க நன்றி. நீங்கள் சொன்னதை மனதில் வைத்துக் கொள்கிறேன்’ என்று ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

ரஜினிகாந்த் பதில் எடப்பாடி பழனிசாமியை குஷியாக்கியுள்ளது. பொதுவாக ரஜினிகாந்த் எப்போது என்ன முடிவெடுப்பார் என்பது தெரியாது. சசிகலா விஷயத்திலும் ரஜினி என்ன முடிவெடுப்பார் என்பதும் அவருக்கு மட்டும் தான் தெரியும்” என்று மேலே பார்த்து கையை காட்டினார் அந்த முக்கிய புள்ளி.

அடுத்த செய்தி