ஆப்நகரம்

மே தின பொதுக் கூட்டங்கள்: அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

மே தின பொதுக் கூட்டங்களை நடத்த கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 20 Apr 2023, 11:57 am
அதிமுக உட்கட்சி மோதலில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி, பொதுச் செயலாளாரக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Samayam Tamil edappadi palanisamy


உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நடைபெற்ற வழக்குகளில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே தீர்ப்புகள் வந்தன. இருப்பினும் தேர்தல் ஆணையத்தில் அதிமுகவில் நிகழ்ந்த விதிகள் மாற்றம், பொதுச்செயலாளர் தேர்வு ஆகியவை இன்னும் அங்கீகரிக்கப்படாமல் உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்து அங்கீகரிக்க கோரி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

இது ஒருபுறமிருக்க கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக செயல்படவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். புதிய உறுப்பினர்களை இணைக்க வலியுறுத்தியுள்ளார். கர்நாடக தேர்தலில் போட்டியிட வேட்பாளரையும் அறிவித்துள்ளார்.
புதிய தலைமைச் செயலகம் கிண்டியில் அமைகிறதா? ராஜ் பவனை காலி செய்வாரா ஆளுநர்?
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மே தின பொதுக் கூட்டங்களை நடத்த கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “வரலாற்றுச் சிறப்புமிக்க மே தினத்தை கொண்டாடும் வகையில், அதிமுக தொழிற்சங்க பேரவை சார்பில், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட தலைநகரங்கள், புதுச்சேரியில் மே தின பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு சூப்பர் சலுகை: முதல்வர் ஸ்டாலின் ‘செம’அறிவிப்பு!
அண்ணா தொழிற்சங்க செயலாளர்களும், கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும் தங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ள மே தின விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோருடன் இணைந்து நடத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி