ஆப்நகரம்

ஓபிஎஸ் வீடு தேடிச் செல்லும் இபிஎஸ்

முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுத்ததற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்துக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளார்.

Samayam Tamil 7 Oct 2020, 4:16 pm
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் இரு மாதங்களாக அரசியல் அரங்கில் எதிரொலித்த நிலையில் இன்று அதற்கான விடை கிடைத்துள்ளது.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி


ஓ.பன்னீர் செல்வமா, எடப்பாடி பழனிசாமியா என்று இரு பக்கமும் அனல் பறந்த நிலையில் பன்னீர் செல்வமே எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தார்.

சுமுகமாக ஒருமித்த முடிவு எட்டப்பட்டது அதிமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் இரு தரப்பு ஆதரவாளர்களும் கோஷங்கள் மூலமாகவும், போஸ்டர்கள் ஒட்டியும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

தமிழக பள்ளிகள் திறப்பு: அரசின் முடிவை வெளியிட்ட அமைச்சர்!

ஆகஸ்ட் மாதம் முதல் அமைச்சர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் வீடுகளுக்கு மாறி மாறி சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இருவரும் நேருக்கு நேர் இதுபற்றி பேசிக்கொள்ளவில்லை.

செயற்குழு கூட்டத்தில்தான் இருவரும் நேரடியாக விவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் நேற்று முதல் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீண்டும் மாறி மாறி இருவரது வீடுகளுக்கும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். நள்ளிரவு வரை இது தொடர்ந்தது. அப்போதும் இருவரும் நேரடியாக பேசிக்கொள்ளவில்லை.

ரஜினிகாந்த் கட்சி தொடக்கம் எப்போது தெரியுமா?

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் மாலை 6 மணிக்கு சந்தித்து எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி