ஆப்நகரம்

தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி நிதி வேண்டும்..! பிரதமருக்கு முதல்வர் கடிதம்...

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு நிதி அளிக்க கோரி பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 25 Mar 2020, 6:27 pm
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ரூபாய் 4 ஆயிரம் கோடி ஒதுக்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி நிதி வேண்டும்


மத்திய அரசின் உத்தரவை அடுத்து தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு அவசரகால உத்தரவை பிறப்பித்து வருகிறது.


கொரோனா தொற்றிலுருந்து மக்களை பாதுகாக்கவும், நோய் வந்த பின்னர் எத்தகைய நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை விதமாக பல்வேறு வகைகளில் நிதி ஒதுக்கப்பட வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.



இதன் காரணமாக முதல்வர் பழனிசாமி மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒத்துக்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இருந்து 500 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ரூபாய் 500 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் எனவும் மொத்தம் 4 ஆயிரம் கோடி நிதி வேண்டி கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில் கொரோனா தடுப்பு நடவ்டிக்கைக்காக பிரதமர் மோடி எடுத்துவரும் தைரியமான நடவடிக்கைகளுக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி