ஆப்நகரம்

டெல்லி முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் கடிதம்!!

டெல்லியில் கொரோனா அறிகுறிகளுடன் கண்காணிப்பில் உள்ள 559 பேருக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் செய்து தரக் கோரி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 24 Apr 2020, 8:23 pm
டெல்லி நிஜாமுதீன் பகுதியில், தப்லீக் ஜமாத் அமைப்பின் சார்பில் கடந்த மாதம் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1,500 பேர் பங்கேற்றனர்.
Samayam Tamil tamilnadu cm


அவர்களில் கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்ட 559 பேர், டெல்லி மாநில அரசின் தனிமைப்படுத்துதல் முகாம்களிலும், மருத்துவமனைகளிலும் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இன்று (ஏப்ரல் 24) கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி நிதி வேண்டும்..! பிரதமருக்கு முதல்வர் கடிதம்...

அதில், "தமிழகத்தை சேர்நத 559 பேர், கொரோனா அறிகுறிகளுடன் டெல்லியில் தனிமைப்படுத்தல் முகாம்களிலும், மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து தர வேண்டும்.

ரம்ஜான் நோன்பு நாளை தொடங்கவுள்ளதால், அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் இவர்களில் நீரிழவு நோய் உள்ளவர்களுக்கு தேவையான மருத்து, மாத்திரைகள் போன்ற அவசிய தேவைகளையும் நிறைவேற்றி கொடுங்கள்" என்று தமது கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி