ஆப்நகரம்

மருத்துவர்களுடன் மீண்டும் ஆலோசிக்கும் முதல்வர்: பொது முடக்கம் அறிவிப்பு எப்போது?

மருத்துவக் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Samayam Tamil 30 May 2020, 1:09 pm
கொரோனா பொது முடக்கம் மே 31ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் இன்று முதல்வர் மீண்டும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.
Samayam Tamil corona lockdown


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது. கொரோனா பரவல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. கடந்த சில நாள்களாக உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

மார்ச் மாத இறுதியில் முதல் பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, அந்தக் கூட்டத்தில் மருத்துவர்கள் முன்வைத்த யோசனைகளின் படியே பொது முடக்க நிபந்தனைகள் வகுக்கப்பட்டன.

கொரோனா: மலைக்க வைக்கும் பாதிப்பு, பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா?

தற்போது நான்காவது பொதுமுடக்கம் முடிவடையவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன்பின் மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதா, கைவிடப்படுவதா, தளர்வு ஏற்படுத்தப்படவுள்ளதா என அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் மருத்துவர்கள் முன்வைக்கும் யோசனைகளை கேட்டறிந்து அதற்கேற்றாற் போல் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என கூறப்படுகிறது.

மருத்துவக் குழுவுடன் ஒரே வாரத்தில் இரண்டாம் முறையாக மருத்துவர் ஆலோசனை நடத்துவது இது முதல்முறையாகும்.

அடுத்த செய்தி