ஆப்நகரம்

அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும் முடியாது அழிக்கவும் முடியாது: முதல்வர் அதிரடி!

மார்ச் மாதத்திற்குள் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சொல்லிய டிடிவி தினகரன் , முதலில் எங்கிருப்பேன் என்று என்பதை ஆண்டவன் பார்த்துகொள்வார் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

TNN 30 Dec 2017, 7:04 pm
மார்ச் மாதத்திற்குள் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சொல்லிய டிடிவி தினகரன் , முதலில் எங்கிருப்பேன் என்று என்பதை ஆண்டவன் பார்த்துகொள்வார் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil edappadi palanisamy says that no one can destroy admk in mgr function
அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும் முடியாது அழிக்கவும் முடியாது: முதல்வர் அதிரடி!


உதகமண்டலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி பேசியதாவது :அதிமுகவை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு எப்போதும் நிறைவேறாது. இந்த ஆட்சியையும் கவிழ்கவும் முடியாது அழிக்கவும் முடியாது. இதை எங்களிடம் இருப்பவர்கள் இதுவரை ஒற்றுமையாக இருந்து அதை நிரூபித்துள்ளோம்.

எதிர்கட்சித் தலைவர் எங்கள் ஆட்சியை கலைப்பதாக கூறினார் .ஆனால் அவரால் எதையும் செய்ய முடியவில்லை. இப்போது மார்ச் மாதத்திற்குள் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று ஒருவர் கூறிவருகிறார். முதலில் அவர் அதுவரை எங்கிருப்பார் என்று பார்ப்போம். ஆண்டவன் என்பவன் இருக்கிறேன் .அவன் நல்லது நினைத்தால் நல்லது செய்வான் .கெட்டது நினைத்தால் கெட்டுத்தான் போவார்கள். என்று அவர் கூறினார்.

அடுத்த செய்தி