ஆப்நகரம்

அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற எடப்பாடி: தொண்டர்கள் உற்சாகம்!

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 28) பதவியேற்றார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 28 Mar 2023, 11:07 am
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்றது. இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது.
Samayam Tamil eps


அந்தவகையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது செல்லும்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டதால் அதற்கான அறிவிப்பையும் அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? இறையன்புவை டீலில் விட்ட ஆளுநர்!
அதிமுக தலைமைக் கழகமான எம்ஜிஆர் மாளிகையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்ப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி அதற்கான வெற்றிச் சான்றிதழை வழங்கினர்.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள், அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதிகரிக்கும் கொரோனா: அடுத்த மாதம் 2 நாள்கள் மட்டும்.. முடிவை அறிவித்த ஒன்றிய அரசு!
ஓ.பன்னீர் செல்வம் தரப்பு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் நாளையே அந்த விசாரணை மூத்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சஃபீக் அமர்வில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி