ஆப்நகரம்

கொரோனாவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவ்வளவுதான்- தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்வர் பூச்சாண்டி!!

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார.

Samayam Tamil 2 Aug 2020, 4:16 pm
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியிடம் ரூ.12 லட்சத்திற்கும் மேல் கட்டணம் வசூலித்ததாக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பீ வெல் தனியார் மருத்துவமனை மீது புகார் எழுந்தது.
Samayam Tamil tamilnadu cm


இதையடுத்து, கொரோனா சிகிச்சைக்காக அந்த மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டிருந்த உரிமையை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது. மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், "கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்த சென்னை கீழ்ப்பாக்கம் - Bewell தனியார் மருத்துவமனைக்கு, கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்டிருந் அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 சிகிச்சை: ரூ.12 லட்சம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு அனுமதி ரத்து!

மேலும், "கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சைக்கு 25 சதவீத படுக்கைகளை தனியார் மருத்துவமனைகள் ஒதுக்க வேண்டும் என்பதும், இம்மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு சில மாதங்களுக்கு முன்ப வரையறுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கொரோனா சிகிச்சை என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்றுவரும் கட்டண கொள்ளை குறித்து முதல்வர் தற்போதுதான் எச்சரிக்கை விடுத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி