ஆப்நகரம்

சசிகலாவை பார்க்க எடப்பாடி பழனிச்சாமி நாளை பெங்களூரு பயணம்?

பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை பார்க்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை பெங்களூரு செல்லவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 20 Feb 2017, 11:36 am
சென்னை: பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை பார்க்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை பெங்களூரு செல்லவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil edappadi palanisamy will go to bengaluru tomorrow
சசிகலாவை பார்க்க எடப்பாடி பழனிச்சாமி நாளை பெங்களூரு பயணம்?


தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா காலமானதையடுத்து, முதல்வராக பன்னீர்செல்வமும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும் பொறுபேற்றனர்.

அதன்பின்னர், அதிமுக சட்டபேரவைக் குழு தலைவராகவும் சசிகலா பொறுபேற்றார். தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் பல்வேறு அதிரடித் திருப்பங்கள் அரங்கேறின. இதனிடையே, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பும் வந்து சேர்ந்தது. அதில், அதில், கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தும், அம்மாநில உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து, அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக பொறுபேற்றார். அமளிகளுக்கிடையே பேரவையில் பெரும்பான்மை பலத்தையும் அவர் நிரூபித்துள்ளார். முதல்வர் பொறுப்பேற்றதும் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை காண முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை பெங்களூரு செல்லவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Edappadi palanisamy will go to bengaluru tomorrow?

அடுத்த செய்தி