ஆப்நகரம்

இன்னும் மூன்றே அமாவாசைக்குள் எடப்பாடி ஜெயிலுக்கு போவார் - ஆர்.எஸ். பாரதி

சேலம் ஆர்ப்பாதத்திற்கு செல்லும் திமுகவினரை போலீசார் கைது செய்யும் சம்பவத்திற்கு திமுக மக்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Dec 2020, 4:20 pm
மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பாஜக, அதிமுக அரசுகளைக் கண்டித்தும் சேலம் எருமை பாளையத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார். அதுபோல தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திமுக சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil rs bharathi dmk


இந்நிலையில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு உத்திரமேரூர் திமுக எம்எல்ஏ சுந்தர் தலைமையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்பு செயலாளரும், ராஜ்ய சபா உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், '' ஒரே நாளில் இந்தியாவில் இப்படியொரு போராட்டத்தை நடத்தும் ஆற்றல் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது. இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள செல்கின்ற திமுகவினரை காவல்துறையினர் ஆங்காங்கெ கைது செய்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்டமெல்லாம் இன்னும் மூன்றே அமாவாசைகள் தான். அவர் எந்த ஜெயிலுக்கு போக வேண்டும் என அவரே முடிவு செய்து கொள்ளலாம். திமுகவினர் எதற்கும் அஞ்சுபவர்கள் கிடையாது. சிறைச்சாலைகளின் கதவுகளை பலமுறை முத்தமிட்டவர்கள் நாங்கள். மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள். அப்படிப்பட்ட எங்கள் கட்சி தொண்டர்களை சேலத்தில் காவல்துறையினர் மூலம் கைது செய்து அடக்குமுறையை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

வெள்ளத்தில் கடலூர், டெல்டா மாவட்டங்கள்: ரூ.1000 கோடியை உடனே வழங்குக - ராமதாஸ்

நான் அரசியலுக்கு வரும்போது அமித்ஷா பிறக்கவே இல்லை. அவருக்கு 56 வயது தான் ஆகிறது. நான் அரசியலுக்கு வந்தே 60 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு முன்பாகவே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன்.

ஆனால், இன்று திமுகவை பார்த்து சர்க்காரியா கமிஷன் பற்றி முதலமைச்சர் பேசுகிறார். சர்க்காரியா கமிஷன் பற்றி என்னோடு விவாதிக்க அதிமுகவினர் யார் வந்தாலும் நான் தயார் தான்'' என இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி