ஆப்நகரம்

ஐந்தாம் கட்ட பொது முடக்கம்: மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர்

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

Samayam Tamil 25 May 2020, 12:02 pm
கொரோனா பரவல் காரணமாக இரு மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது.
Samayam Tamil edappadi palanisamy


நான்காம் கட்ட பொது முடக்கம் மே 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் அதன்பின்னர் பொது முடக்கத்தை நீட்டிப்பதா, கைவிடுவதா, சில இடங்களைத் தவிர்த்து பல இடங்களில் தளர்வுகளை ஏற்படுத்துவதா என அரசு தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு பொது முடக்கம் நீட்டிப்பு, தளர்வு குறித்து அறிவித்தாலும் ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழு, மாவட்ட ஆட்சியர்கள், கொரோனா சிறப்பு பணிக் குழு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்வார்.

ஓபிஎஸ் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

ஏற்கெனவே நான்கு முறை இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் முதல்வர் பழனிசாமி நாளை தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அந்தக் கூட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மருத்துவர்கள் சில ஆலோசனைகளை வழங்குவார்கள்.

அந்தக் கூட்டத்தில் ஐசிஎம்ஆர் துணை இயக்குநரும் கலந்து கொள்வார். கூட்டத்துக்குப் பின்னர் மருத்துவர்கள் செய்தியாளர்களைச் சந்திக்க வாய்ப்புகள் உள்ளன.

அதன்பின்னர் முதல்வர் மாவட்ட ஆட்சியர்கள், சிறப்பு பணிக்குழு ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பொது முடக்கத்தை நீட்டிப்பதா, கைவிடுவதா, எந்தெந்த பகுதிகளில் தளர்வு ஏற்படுத்தலாம், வைரஸ் பரவலைத் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்துவார்.

அடுத்த செய்தி