ஆப்நகரம்

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்!

கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் ரூ.213 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

Samayam Tamil 23 Oct 2020, 3:18 pm
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் ரூ.213 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி


சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி வட்டம் வீரசோழபுரத்தில் 100 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26,482 சதுர மீட்டர் பரப்பளவில் , தரை மற்றும் 8 தளங்களுடன் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

அதேபோல், புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, செங்கல்பட்டு வட்டம் வேண்பாக்கத்தில் 119 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 27,062 சதூ மீட்டர் பரப்பளவில் , தரை மற்றும் 4 தளங்களுடன் கட்டப்படவுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கும் முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக இன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னையில் புறநகர் ரயில் சேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

இந்த நிகழ்ச்சியில், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பென்ஜமின், தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி