ஆப்நகரம்

தமிழகத்தில் 9 மாதங்களில் 3வது முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி!

கிட்டத்தட்ட 15 நாட்கள் அதிமுக உட்கட்சி பூசலால் ஏற்பட்ட அரசியல் பிரச்னைகளைக் கடந்து முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல்வராக பதவியேற்றார்.

TOI Contributor 16 Feb 2017, 5:08 pm
சென்னை : கிட்டத்தட்ட 15 நாட்கள் அதிமுக உட்கட்சி பூசலால் ஏற்பட்ட அரசியல் பிரச்னைகளைக் கடந்து முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல்வராக பதவியேற்றார்.
Samayam Tamil edappadi palaniswami to take oath as tamil nadu chief minister
தமிழகத்தில் 9 மாதங்களில் 3வது முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி!


முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்தபின், அதை கட்டாயப்படுத்தியதன் பெயரில் செய்ததாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மீது பகிரங்க குற்றச்சாட்டு சாட்டினார். இதைத் தொடர்ந்து அதிமுக இரண்டு பிரிவாக பிரிந்தது. இதனிடையே சசிகலா முதல்வர் பதவிக்கு முயற்சி செய்தார்.



இருப்பினும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் எந்த ஒரு பதிலையும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்தார். இதைத் தொடர்ந்து சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

சசிகலாவால் அதிமுக சார்பாக முதல்வர் பதவிக்கு எடப்பாடி கே பழனிச்சாமி பொறுப்பேற்க நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனக்கு உள்ள எம்.எல்.ஏக்களின் பட்டியலை அளித்தார்.



இதையடுத்து இன்று 4.30 மணிக்கு புதிய அமைச்சரவை பதவியேற்ற ஆளுநரால் அழைக்கப்பட்டார்.
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக பதவிபிரமாணம் செய்து வைத்த ஆளுநர் ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். அவருடன் அமைச்சர்கள் அணி, அணியாக பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டு, ரகசிய காப்பு பிரமாணத்தை ஏற்றனர்.

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகவும், அமைச்சர்களையும் ஆளுநர் பதவிபிரமாணம் செய்து வைத்துள்ளார்.

முதல்வராக பதவியேற்கும் பழனிச்சாமி அடுத்த 15 நாட்களில் தனக்கு பெரும்பான்மை உள்ளதை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டியது கட்டாயம்.



புதிய அமைச்சரவைப் பட்டியல்:

எடப்பாடி பழனிச்சாமி - முதல்வர், நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட பல துறைகள்

செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை,

தங்கமணி மின்சாரத்துறை

ஓ.எஸ்.மணியன் கைத்தறித்துறை

வேலுமணி ஊரக தொழில்துறை

திண்டுக்கல் சீனிவாசன் வனத்துறை

சி.வி.சண்முகம் சட்டத்துறை

கூட்டுறவுத்துறை -செல்லூர கே.ராஜூ

மீன்வளத்துறை- ஜெயக்குமார்,

சுற்றுச்சுழல்துறை- கருப்பணன்

உயர்கல்வித்துறை- கே.பி.அன்பழகன்,

உணவுத்துறை- காமராஜ்,

தொழில்துறை-எம்.சி. சம்பத்,

மின்சாரத்துறை- தங்கமணி,

ஊரகத்தொழில்துறை- வேலுமணி

உடுமலை ராதாகிருஷ்ணன்- வீட்டுவசதித்துறை,

கே.டி.ராஜேந்திரபாலாஜி- பால்வளத்துறை,

சரோஜா- சமூகநலத்துறை,

பென்ஜமின்- ஊரக தொழில்துறை

எம்.ஆர்.விஜயபாஸ்கர்- போக்குவரத்துத்துறை,

துரைகண்ணன்- வேளாண்துறை

ஆர்.பி.உதயகுமார்- வருவாய்த்துறை,

வெல்லமண்டி நடராஜன்- சுற்றுலாத்துறை

சேவூர் எஸ்.ராமச்சந்திரன்- இந்து அறநிலையத்துறை,

பா.பாலகிருஷ்ண ரெட்டி- கால்நடை பராமரிப்பு,

எஸ்.வளர்மதி- சிறுபான்மையினர் நலம்

ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறைஅமைச்சர்

மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை

நிலோபர் கபில் - பணியாளர்நலத்துறை

காமராஜ் - உணவு மற்றும் சிவில் சர்வீஸ்

கே.சி.வீரமணி- வணிகவரி,

கடம்பூர் ராஜூ- செய்தி மற்றும் விளம்பரம்

அடுத்த செய்தி