ஆப்நகரம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் நாளை ஆய்வு

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை நேரில் ஆய்வு செய்கிறார்.

Samayam Tamil 18 Aug 2018, 2:22 pm
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமிநாளைநேரில் ஆய்வு செய்கிறார்.
Samayam Tamil palaniswami-pti


தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளைம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார்.


கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பெரியாறு அணையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால்,வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 67 அடியை எட்டியது.

இந்நிலையில், 20 ஆம் தேதி முதல் அடுத்த 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி, சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

இதனால் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்களை உள்ளிட்ட பகுதிகளில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் தெரிவித்தள்ளார்.

அடுத்த செய்தி