ஆப்நகரம்

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விவரம்; செக் வைத்த அமைச்சர் செங்கோட்டையன்!

கல்விக்கட்டணம் தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 21 May 2018, 3:39 pm
சென்னை: கல்விக்கட்டணம் தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil Sengottaiyan


சென்னை கோட்டூர்புரத்தில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன், பள்ளிக் கலவித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடக்கப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க அறிவுறுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் இருக்கும் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் படிக்க 1,32,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அவற்றை பரிசீலனை செய்து, சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர். தனியார் பள்ளிகளின் சேர்க்கை கட்டணத்தை, அந்தந்தப் பள்ளிகளில் உள்ள அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் சுகாதாரம் குறித்து ஆய்வுசெய்ய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், மேல்நிலைப் பள்ளி கல்வி அலுவலர்களுடன் இணைந்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று, அனைத்து விதமான ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆண்டிற்கு இரண்டு முறை ஒரு பள்ளிக்குச் சென்று, ஒரு அலுவலர் ஆய்வு நடத்த முடியும். அதன் பின்னர், கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்கள் கூறும் கருத்துகள் மூலம் அந்தந்தப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்.

1, 6, 9, மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வாரத்துக்கு 4 சீருடைகள் என நான்கு நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் நமது மாணவர்கள் 4 விதமான சீருடைகளை அணிந்து வந்தால், மொத்த தமிழகமே திரும்பிப் பார்க்கும் என்று கூறினார்.

Education fees structure must be displayed says Minister Sengottaiyan.

அடுத்த செய்தி