ஆப்நகரம்

திருவாரூரில் நிவாரணப் பணிகளை தொடர தடை இல்லை – தோ்தல் ஆணையம்

இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூரில் புயல் நிவாரணப் பொருட்களை வழங்க தடை இல்லை என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 4 Jan 2019, 9:40 pm
இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூரில் புயல் நிவாரணப் பொருட்களை வழங்க தடை இல்லை என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil Gaja Cyclone


தமிழகத்தில் 20 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் திருவாரூா் தொகுதிக்கு மட்டும் வருகின்ற 28ம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக கஜா புயலால் திருவாரூா், நாகை உள்ளிட்ட பகுதிகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன.

புயல் பாதிப்புகளை சரி செய்யும் வகையில் அங்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், நிவாரணப் தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தோ்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதனால் புயல் பாதித்த திருவாரூா் பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடியுமா? நிவாரணப் பொருட்களை வழங்குவதில் தொய்வு ஏற்படுமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினா்.

இந்நிலையில் தோ்தல் ஆணையம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி மழை பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள எந்தவித தடையும் கிடையாது. ஆனால் நிவாரணப் பணிகள் அரசு அதிகாாிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாாிகள் மூலமாக மட்டுமே நடைபெற வேண்டும். இதில் அரசின் தலையீடுகள் எதுவும் இருக்கக் கூடாது என்று தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.

அடுத்த செய்தி