ஆப்நகரம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

TNN 9 Mar 2017, 1:13 pm
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil election commission announced by election date for r k nagar
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பைத் தொடர்ந்து அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு காலி இடம் உருவானது.

இதனையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும். வேட்புமனுக்கள் பரிசீலனை மறுநாளே நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் மார்ச் 27ஆம் தேதி.

வாக்குப்பதிவு ஏப்ரல் 12ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 15ஆம் தேதியும் நடக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி