ஆப்நகரம்

எடப்பாடி ரூட் கிளியர்: ஓபிஎஸ் கூட்டம் நடத்தும் போது வந்த செய்தி!

எடப்பாடி பழனிசாமி அனுப்பிய அதிமுக வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 21 Dec 2022, 1:38 pm
அதிமுகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று முக்கிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
Samayam Tamil eps  ops


எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 29ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு அதிமுகவின் வரவு செலவு ஆவணங்களை அனுப்பியிருந்தார். அந்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி என குறிப்பிட்டு அனுப்பப்பட்ட 2021-2022 நிதியாண்டு ஆவணங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.

கட்சியின் வருமான வரி கணக்கும் பழனிசாமி பெயரிலேயே செலுத்தப்பட்டு அதன் நகலும் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: எங்கெங்கு மழை? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
இந்நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை குறிப்பிட்டு ஒரு அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி தரப்பால் சமர்ப்பிக்கப்பட்டது. விரைவில் அதுவும் ஏற்றுக்கொள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பதிவுகள் படி கட்சியின் உச்ச பதவியான ஒருங்கிணைப்பாளராக நான் தான் தொடர்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து கூறிவருகிறார். அந்த அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரை கட்சியிலிருந்து நீக்கினார். புதிய நிர்வாகிகளை நியமித்தார்.

இன்று சென்னை வேப்பேரியில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்துக்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறார். ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த விளக்கம்!
அதிமுக இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது என்று நிறுவுவதற்காக ஓபிஎஸ் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்துகிறார் என்று கூறப்படும் நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரித்துள்ளது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி