ஆப்நகரம்

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை ஊடகங்கள் ஒளிபரப்பக் கூடாது : தேர்தல் ஆணையம்

டிடிவி தினகரன் அணியின் ஆதரவாளர் வெளியிட்ட வீடியோவை எந்த ஊடகங்களும் ஒளிபரப்பக் கூடாது என்று ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

TNN 20 Dec 2017, 2:02 pm
டிடிவி தினகரன் அணியின் ஆதரவாளர் வெளியிட்ட வீடியோவை எந்த ஊடகங்களும் ஒளிபரப்பக் கூடாது என்று ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil election commission ordered not to telecast jayalalitha treatment video in media
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை ஊடகங்கள் ஒளிபரப்பக் கூடாது : தேர்தல் ஆணையம்

ஆர். கே.நகர் இடைத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்று மாலையோடு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் இன்று வெளியிட்டார்.

நாளை ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறும் நிலையில் இதுபோன்ற வீடியோவை வெளியிட்டது விதி மீறல் என்பதால் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறானது என்பதால் அந்த வீடியோ ஒளிபரப்பை நிறுத்த தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்கே நகருக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜெயலலிதா வீடியோவை ஒளிபரப்புவது ஆர்கே நகர் தேர்தல் விதிகளுக்கு மாறானது. எனவே இந்த வீடியோவை ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி