ஆப்நகரம்

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்திற்கு நேரக் கட்டுப்பாடு விதித்தது தேர்தல் ஆணையம்!

பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் விதமாக மாலை 5 மணிமுதல் காலை 9 மணிவரை வீடுவீடாக பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது

TNN 25 Nov 2017, 3:08 pm
சென்னை: பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் விதமாக மாலை 5 மணிமுதல் காலை 9 மணிவரை வீடுவீடாக பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
Samayam Tamil election commissions new move to stop money distribution to voters in rk nagar by election
ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்திற்கு நேரக் கட்டுப்பாடு விதித்தது தேர்தல் ஆணையம்!


மறைந்த முன்னாள் முதல்வரின் தொகுதியான ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்றமுறை வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததால், கடைசி நேரத்தில் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்துசெய்தது. இந்நிலையில், இந்த முறை, அதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, மாலை 5 மணிமுதல் காலை 9 மணிவரை வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடை அறிவித்துள்ளது.

மேலும், தெருக்களில் தற்காலிக பூத் அமைத்து பிரச்சாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேர பணப்பட்டுவாடாவைத் தடுக்க ஒவ்வொரு வீதிக்கும் துணை ராணுவ வீரரைப் பணியமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பிரச்சார வாகனங்கள் அனுமதிப் பெற்று இயங்க வேண்டும் என்றும், அடையாளம் தெரியாத வெளியூர் வாகனங்கள் வந்தால் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி