ஆப்நகரம்

கன்னித்தீவு கதை போல் தொடரும் இரட்டை இலை விவகாரம்

இரட்டை இலை யாருக்கு என்பதை முடிவுசெய்வது குறித்த விசாரணை தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இன்று 7வது முறையாக நடக்கிறது.

TNN 8 Nov 2017, 12:10 pm
டெல்லி: இரட்டை இலை யாருக்கு என்பதை முடிவுசெய்வது குறித்த விசாரணை தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இன்று 7வது முறையாக நடக்கிறது.
Samayam Tamil election commissions probe on allotting twin leaves symbol continues today
கன்னித்தீவு கதை போல் தொடரும் இரட்டை இலை விவகாரம்


இரட்டை இலை யாருக்கு என்பது குறித்து விரைந்து முடிவு காண வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த அக்டோபர் 6ஆம் தேதி முதல் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த விசாரணை டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது.

இதுவரை ஆறு முறை இது தொடர்பான விசாரணை நடத்துள்ள நிலையில் இன்று 7வது முறையாக இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கிறது. இன்றைய நடக்கும் விசாரணையில் அதிமுகவின் எடப்பாடி தரப்பிலும் டிடிவி தினகரன் தரப்பிலும் வழக்கறிஞர்கள் கலந்துகொள்கின்றனர்.

இதனிடைய, இன்று மாலை டிடிவி தினகரன் பெங்களூரு பரப்பரன அக்ரஹார சிறையில் சசிகலாவைச் சந்திக்க உள்ளார். அப்போது, இரட்டை இலை விவகாரம் குறித்தும் பேசுவார் என்று கூறப்படுகிறது.

அதிமுக சின்னம் தொடர்பாக நவம்பர் 10ஆம் தேதிக்குள் இறுதி முடிவு அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி