ஆப்நகரம்

உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.

TOI Contributor 4 Jan 2017, 12:53 pm
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதி தேர்தல் தேதிகளை டெல்லியில் இன்று அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
Samayam Tamil election dates for upcoming assembly polls in up punjab uttarakhand manipur goa announced
உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு


கோவா, பஞ்சாப்பில் பிப்ரவரி 4ஆம் தேதி தேர்தல். மணிப்பூரில் முதல் கட்டமாக பிப்ரவரி 8ஆம் தேதியும், இந்த மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக மார்ச் 8 ஆம் தேதியும் தேர்தல் நடக்கிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் மார்ச் 15ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த மாநிலத்தில் முதல் கட்டமாக 73 தொகுதிகளுக்கு பிப்ரவரி 11ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 67 தொகுதிகளுக்கு பிப்ரவரி 15ஆம் தேதியும், 3ஆம் கட்டமாக 69 தொகுதிகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதியும், 4ஆம் கட்டமாக 53 தொகுதிகளுக்கு பிப்ரவரி 23ஆம் தேதியும், 5ஆம் கட்டமாக 52 தொகுதிகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதியும், 6ஆம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மார்ச் 4ஆம் தேதியும், 7ஆம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு மார்ச் 8 ஆம் தேதியும் தேர்தல் நடக்கிறது.

இந்த 5 மாநிலங்களிலும் மார்ச் 11ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

election dates for upcoming assembly polls in up, punjab, uttarakhand, manipur, goa announced

அடுத்த செய்தி