ஆப்நகரம்

மக்களை பயத்தில் உலவவிட்ட ‘அரிசி ராஜா’ பிடிபட்டான்!

அர்த்தனாரி பாளையம், பருத்தியூர், கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களை சேதப்படுத்திவந்த அரிசி ராஜா என்ற காட்டு யானை பிடிப்பட்டது.

Samayam Tamil 14 Nov 2019, 8:09 am
வன விலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நடமாடுவது தற்போது அதிகரித்துவருகிறது. காடுகள் அழிப்பு, பருவநிலை மாற்றம் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது அதற்கு அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள்தான்
Samayam Tamil அரிசி ராஜா


மலைமேல் ஏறிய மக்கள்; தேடும் ட்ரோன்கள்- அரிசி ராஜாவை பிடிக்க வனத்துறை மும்முரம்!

ஆறு மாதங்களுக்கும் மேலாக மக்கள் வசிக்கும் இடங்களில் சுற்றித்திரிந்தது அரிசி ராஜா என்ற காட்டு யானை. இந்த யானை தாக்கியதில் மே மாதம் ஆறு வயது சிறுமி உட்பட இருவர் பலியானார்கள். சமீபத்தில் ராதாகிருஷ்ணன் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து, அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

எங்கடா இருக்க ‘அரிசி ராஜா’?- மயக்க ஊசியுடன் காட்டுக்குள் இறங்கிய வனத்துறை!

அர்த்தனாரி பாளையம், பருத்தியூர், கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களை சேதப்படுத்திவந்த இந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கக் கோரி பொதுமக்கள் வால்பாறை சாலையில் மறியல் செய்தனர். இதையடுத்து அரிசி ராஜாவை மயக்க ஊசி கொடுத்து பிடிக்க வனத்துறை முடிவு செய்தது. அரிசி ராஜாவை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் மூன்று நாள்களாக அந்தப் பகுதிகளில் கும்கி யானைகளுடன் முகாமிட்டிருந்தனர்.

ட்ரோன்கள் மூலமாகவும் யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஆண்டியூர் அருகே ஒரு தென்னந்தோப்பில் நின்ற யானையை கும்கி யானைகள் உதவியுடன் கயிறு கட்டி தடுத்தனர். பின்னர் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து இரண்டு மயக்க ஊசிகள் போடப்பட்டது.

அரிசி மூட்டையுடன் காட்டுக்குள் திரியும் வனத்துறையினர்... யார் இந்த அரிசிராஜா?

இந்தப் பணியில் சலீம், கபில் தேவ் என்ற இரண்டு கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டன. அங்கிருந்து யானையை லாரியில் ஏற்றினர். டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள வரகழியாறு வளர்ப்பு முகாமிற்கு கொண்டு செல்கின்றனர்.

அடுத்த செய்தி