ஆப்நகரம்

நீலகிரியில் அரசு பேருந்து சேதம்: காட்டு யானை அட்டூழியம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை ஒன்று, பேருந்து கண்ணாடியை உடைத்து நாசம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 4 Nov 2016, 1:51 pm
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை ஒன்று, பேருந்து கண்ணாடியை உடைத்து நாசம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil elephant attacks govt bus in nilgiris none harmed
நீலகிரியில் அரசு பேருந்து சேதம்: காட்டு யானை அட்டூழியம்


கூடலூர் அருகே உள்ளது கொளப்பள்ளியில் இருந்து அரசு பேருந்து ஒன்று கோவைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை பேருந்தை இடைமறித்துள்ளது. பாதி வழியில் நின்ற பேருந்தை நோக்கி பின்னால் வந்த வாகனங்கள் தொடர்ந்து ஹாரன் எழுப்பியதில் ஆத்திரமடைந்த காட்டு யானை பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து துவம்சம் செய்துள்ளது.

இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் பதறியடித்து பின்புறமாக இறங்கிச் சென்று உயிர் தப்பினர். இப்பகுதியில் அடிக்கடி சுற்றித் திரியும் இந்த காட்டு யானையால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

இதன் பிறகாவது யானையை பிடித்து முதுமலை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி