ஆப்நகரம்

சிகிச்சை அளித்தும் பயனில்லை.. பரிதாபமாக இறந்துபோன பெண் யானை.!

கோவையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பெண் யானை இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Aug 2019, 7:28 pm
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது மாங்கரை. இந்த பகுதியில் இன்று காலை 22 வயதான பெண் யானை ஒன்று உடல்நல குறைவோடு குட்டியுடன் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
Samayam Tamil yaanai


தகவல் அறிந்ததும் வனத்துறையினரும், மருத்துவர்களும் உடனே அப்பகுதிக்கு விரைந்தனர். யானையை பரிசோதித்த மருத்துவ நிபுணர்கள் செரிமான கோளாறால் யானை அவதி பட்டிருப்பதை கண்டறிந்தனர். உணவு பாதையில் அடைப்பு ஏற்பட்டு, செரிமானம் ஆகாமல் இருந்ததால் யானைக்கு நடக்கக்கூட முடியாமல் போயிருக்கிறது.

சிறிது நேரத்தில் யானையின் உடல்நிலை மிக மோசமானதால் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பயனில்லாமல் பெண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யானையுடன் சுற்றி திரிந்த குட்டி ஒன்று சிகிச்சை அளித்த நேரத்தில் மருத்துவர்களுக்கு இடையூறு செய்ததாகவும் வனத்துறையினர் கூறினர்.

யானைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் நிலையில் இந்த பெண் யானையின் இழப்பு அங்கு இருந்தவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் பெரிய இழப்பாகவே நினைக்க வைக்கிறது.

வன விலங்குகளை பாதுகாக்க பொதுமக்களாகிய நீங்களும் உதவ வேண்டும். விலங்குகளுக்கு இது போன்ற இயலாமை ஏற்படும் போதும், பாதை மாறி வரும்போதும் வனத்துறையினருக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும் என அங்கிருந்த வனத்துறை அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி