ஆப்நகரம்

உருவாகும் புரேவி புயல்: அவசரமாய் ஆலோசனையில் இறங்கிய முதல்வர்!

வங்கக் கடலில் புதிய புயல் உருவாகவுள்ள நிலையில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Samayam Tamil 1 Dec 2020, 12:51 pm
தமிழ்நாட்டில் வாரம் ஒரு புயல் கரையைக் கடக்கும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த வாரம் நிவர் புயல் புதுச்சேரி மரக்காணம் பகுதியில் கரையைக் கடந்த நிலையில் இந்த வாரம் புதிய புயல் உருவாகி தென் தமிழக கடற்கரையை நோக்கி வர உள்ளது.
Samayam Tamil Edappadi


கஜா புயலின் போது தமிழக அரசு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை முறையாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நிவர் புயலை சரியாக கையாள வேண்டும் என அரசு எந்திரம் முடுக்கிவிடப்பட்டது.

நிவர் புயல் வருவதற்கு முன்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள்,அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். எதிர்பார்த்த அளவு பெரிய பாதிப்பை நிவர் புயல் ஏற்படாதது பெரிய ஆறுதலாக அமைந்தது. அதே சமயம் அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தது.

அடுத்தகட்ட ஊரடங்கு, கல்லூரி திறப்பு தேதி: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

அதேபோல் வங்கக் கடலில் புதிய புயல் உருவாக உள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை பெய்த மழையின் அளவு, நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்பு, நிவாரணம், ஆகியவை குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மேலும் வங்கக் கடலில் புதிய புயல் உருவாகிய நிலையில் தென் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால அங்கு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

ஜனவரியில் தமிழக பள்ளிகளைத் திறக்க திட்டம்? அரசுக்கு அழுத்தம்!

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார் போன்றோரும் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி