ஆப்நகரம்

என் தேசம் என் உரிமை கட்சியின் ஆர்கே நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு

என் தேசம் என் உரிமை கட்சியின் சார்பில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

TNN 18 Mar 2017, 6:58 pm
சென்னை: என் தேசம் என் உரிமை கட்சியின் சார்பில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
Samayam Tamil en desam en urimai party announces its candidate for rk nagar
என் தேசம் என் உரிமை கட்சியின் ஆர்கே நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் அதிமுக சசிகலா அணி சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பன்னீர்செல்வம் அணி சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை சார்பில் தீபா, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லோகநாதன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், என் தேசம் என் உரிமை கட்சியின் சார்பில், ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில், களமிறங்கும் வேட்பாளராக ஜெயந்தி சந்திரன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

pic.twitter.com/5pAtuQWjUo — EN DESAM EN URIMAI (@NationRights) March 18, 2017 மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க நடைபெற்ற இளைஞர்களின் எழுச்சிப் போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. அந்த போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தனிக் கட்சி தொடங்க திட்டமிட்டு, என் தேசம் என் உரிமை என்ற பெயரில் அண்மையில் புதிய கட்சியைத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
En Desam En Urimai party announces its candidate for RK Nagar

அடுத்த செய்தி