ஆப்நகரம்

செந்தில் பாலாஜிக்கு டெல்லி செக்: என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கு வேகமெடுத்துள்ளது.

Samayam Tamil 25 Nov 2021, 11:19 am
அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து அமலாக்கத்துறை காய் நகர்த்தி வருகிறது.
Samayam Tamil senthil balaji


கோவை மாவட்டத்தில் திமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாத நிலையில் அங்கு எப்படியாவது திமுகவை கால் ஊன்ற வைக்க ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாகவே கோவை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்து கட்சி, ஆட்சி இரண்டிலும் அந்தப் பகுதியில் முக்கிய நடவடிக்கைகளை அவர் மூலமே மேற்கொண்டு வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளை பரபரப்பாக மேற்கொண்டு வரும் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலம் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
சீமான் மனைவி பெயரில் கொடைக்கானலில் ஏக்கர் கணக்கில் நிலம்?
செந்தில் பாலாஜி மீதான ஒரு மோசடி வழக்கு மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அந்த வழக்கு சமீபகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதனை டெல்லி தூசி தட்ட தொடங்கியுள்ளது.

மதுரை அமலாக்கத்துறையில் நடைபெற்று வந்த வழக்கை, ஹரிஷ் என்ற அதிகாரி விசாரித்து வந்ததாகவும், இந்த சூழலில், அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் கரூரில் இருந்து அதிகாரி ஹரிஷின் சொந்த ஊரான ஆந்திராவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டதாகவும் சொல்கிறார்கள். அதன்பின்னர் வழக்கு விசாரணை கிடப்பில் போட்டதாகவும் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?
இந்த தகவலை அறிந்த டெல்லி மேலிடம், சென்னை அமலாக்கத்துறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை மாற்றியது. அதுமட்டுமல்லாமல் வழக்கை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு சென்றுள்ளதாக கூறுகிறார்கள்.

இதனால் செந்தில் பாலாஜிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணையை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படவும் முகாந்திரம் இருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
ரேஷன் அட்டைதாரர்கள் ஹேப்பி: பொங்கல் பரிசு தொகுப்பில் இப்படியொரு சர்ப்ரைஸ்!
ஏன் தற்போது செந்தில் பாலாஜி மீதான வழக்கு தீவிரமெடுக்கிறது என விசாரித்தால், திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க டெல்லி முடிவெடுத்து முக்கிய அமைச்சர்கள் குறித்த பட்டியலை தயாரித்துள்ளது. இதில் செந்தில் பாலாஜி தான் டாப்பில் உள்ளாராம். அவருக்கு கொடுக்கப்படும் அழுத்தம் மூலம் ஸ்டாலினுக்கு செக் வைக்க டெல்லி திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

அடுத்த செய்தி