ஆப்நகரம்

கே.ஆர்.பி அணை ஷட்டர் உடைந்த விவகாரம்; ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் ஆன அதிகாரி!

அணையின் மதகு உடைந்ததால், செயற்பொறியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

TNN 1 Dec 2017, 3:30 pm
கிருஷ்ணகிரி: அணையின் மதகு உடைந்ததால், செயற்பொறியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
Samayam Tamil engineer suspended for krishnagiri dam shutter broken
கே.ஆர்.பி அணை ஷட்டர் உடைந்த விவகாரம்; ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் ஆன அதிகாரி!


கே.ஆர்.பி எனப்படும் கிருஷ்ணகிரி அணை, துடுகனஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையால், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையால், கே.ஆர்.பி அணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அணையின் முதலாவது ஷட்டரில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

இதனால் வெளியேறும் அதிகப்படியான நீர் காரணமாக, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணையில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக, கே.ஆர்.பி அணையின் செயற்பொறியாளர் பாலசுப்ரமணியனை, தலைமை செயற்பொறியாளர் நேற்று பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

பாலசுப்ரமணியன் நேற்று தான் ஓய்வு பெறவிருந்தது குறிப்பிடத்தக்கது. பராமரிப்பு பணியில் ஏற்பட்ட குறைபாடு தான், ஷட்டர் உடைப்பிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Engineer suspended for Krishnagiri dam shutter broken.

அடுத்த செய்தி