ஆப்நகரம்

இன்ஜீனியரிங் விண்ணப்பத்தை தமிழில் பூர்த்தி செய்ய முடியாது; அண்ணா பல்கலை. பிடிவாதம்

இன்ஜீனியரிங் படிப்புக்கான விண்ணப்பத்தை தமிழில் பூர்த்தி செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 10 May 2018, 4:31 pm
இன்ஜீனியரிங் படிப்புக்கான விண்ணப்பத்தை தமிழில் பூர்த்தி செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil anna university.


இன்ஜீனியரிங் படிப்புக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இவ்வாறு ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தினால், கிராமப்புற மாணவர்கள் சிரமப்படுவார்கள் என்று தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ எழிலரசன் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அளித்த பதில் மனுவில், ஆன்லைன் முறையிலான மாணவர் சேர்க்கை என்ற அறிவிப்பை கடந்த கல்வி ஆண்டே அறிவித்து விட்டதாகவும், இந்த முறையில் ஆங்கில அறிவோ அல்லது கம்ப்யூட்டர் அறிவோ அவசியம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது, மேலும், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் எளிமையாக விண்ணப்பிக்கலாம் என்றும், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் 42 இடங்களில் உதவி மையங்கள் அமைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிராமப்புற மாணவர்கள் பலருக்கு வங்கி கணக்கே இல்லாத நிலையில், எப்படி டெபிட் கார்டு, ஆன்லைன் மூலமாக விண்ணப்பத் தொகையை செலுத்துவார்கள் என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த நடைமுறையில் பல்வேறு சிக்கல் இருப்பதால், மாணற்று நடவடிக்கையாக விண்ணப்பத்தொகையை ரொக்கமாகவோ அல்லது வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) ஆக செலுத்த அனுமதிக்கலாமா என்று கேட்டனர். அதே போல், இன்ஜீனியரிங் படிப்புக்கான விண்ணப்பத்தை தமிழில் பூர்த்தி செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், விண்ணப்பத்தை தமிழில் பூர்த்தி செய்வது என்பது முடியாத காரியம் என்று தெரிவித்தனர். இதே போல், டிடி மூலம் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலும் சிக்கல் உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி