ஆப்நகரம்

கல்வி கடன் கட்ட கூறி வங்கி மிரட்டல் : மாணவன் தற்கொலை

கல்விக்கடன் உடனடியாக திருப்பிச்செலுத்தக்கூறி மிரட்டியதால், பெறியியல் படித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

TNN 16 Jul 2016, 3:14 pm
மதுரை : கல்விக்கடன் உடனடியாக திருப்பிச்செலுத்தக்கூறி மிரட்டியதால், பெறியியல் படித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Samayam Tamil engineering student commits suicide
கல்வி கடன் கட்ட கூறி வங்கி மிரட்டல் : மாணவன் தற்கொலை


மதுரை மாவட்டம், அவனியாபுரத்தை சேஎர்ந்த மாணவன் லெனின். இவர் பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் படித்தவர். படிப்பிற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கல்வி கடன் பெற்றிருந்தார். இவர் படிப்பை முடித்து வெளிநாடு சென்று வேலைப்பார்க்க திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், இவர் வாங்கிய 1.90 லட்சம் ரூபாய் பணத்தை உடனே வங்கிக்கு திருப்பி செலுத்தக்கூறி வங்கி சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பிறகு வங்கி கடன் பெற்றவர்களிடம் வசூலிக்கும் தனியார் நிறுவன ஏஜெண்ட்கள் மூலம் லெனினின் மதிப்பெண் சான்றிதழ்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த லெனின் தற்கொலைசெய்துகொண்டார்.

லெனினின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறிய அவரது பெற்றோர், சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அண்மைக்காலமாக வங்கியில் கடன் பெற்றவர்களிடம் கடனை திருப்ப செலுத்தக் கூறி சில ஏஜெண்டுகள் மூலமாக துன்புறுத்துவதாகவும், இதனால் பல்வேறு தற்கொலை சம்பவங்கள் அரங்கேறிவருகின்றது.

இதுபோன்ற தற்கொலை எண்ணங்கள் கை விடவும், மனதை தைரியப்படுத்தவும், 104 என்ற எண்ணிற்கு அழைத்தால், மாநில அரசு சார்பில் தகுந்த ஆலோசனை வழங்கி வருகின்றது.

அடுத்த செய்தி