ஆப்நகரம்

ஓபிஎஸ்ஸை இல்லம் தேடிச் சென்று நன்றி கூறிய இபிஎஸ்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவித்ததற்காக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

Samayam Tamil 7 Oct 2020, 8:17 pm
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியின் பெயரை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
Samayam Tamil ops and eps


அத்துடன், 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் பெயரை அவர் அறிவித்தார். இதனையடுத்து, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கடந்த சில மாதங்களாக நீடித்துவந்த சர்ச்சை இன்று முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு விரைந்தார்.

முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான். ஓ.பி.எஸ். அறிவிப்பு

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஓபிஎஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்காக ஓபிஎஸ்ஸுக்கு இபிஎஸ் நேரில் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.


அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் முதல்வருடன் ஓபிஎஸ் இல்லத்துக்கு வருகைப் புரிந்தனர். வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக தங்களை தேர்ந்தெடுத்ததற்காக அவர்களும் துணை முதல்வருக்கு நன்றிகளை கூறிக் கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஆசி: தங்களது இல்லத்துக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஓபிஎஸ்ஸின் மகனும், எம்.பி.யுமான ஓ.ரவீந்திரநாத் ஆசியும், வாழ்த்துக்களையும் பெற்றார்.

அடுத்த செய்தி