ஆப்நகரம்

காவி உடை அணிந்து தர்காவில் உறங்கும் இஸ்லாமியர்.! ஏர்வாடியில் சலசலப்பு..

ஏர்வாடியில் காவி உடை அணிந்துக்கொண்டு ஊரில் சுற்றி வந்த வேற்று மாநிலத்து இஸ்லாமிய நபரைச் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 17 Sep 2019, 7:55 pm
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இந்து சாமியார் போல் வேடம் அணிந்த வேற்று மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்ததால், அவரை பிடித்துச் சென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Samayam Tamil 7


விசாரணையில், அவர் பெயர் அப்துல் வகாப் என்றும் தந்தையின் பெயர் முனாப் எனவும், சொந்த ஊர் மகாராஷ்டிரா எனவும் கூறியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் எதற்காகக் காவி உடை அணிந்திருந்தார் என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் உள்ளனர். மேலும் வேலை நிமித்தமாக அநேக இஸ்லாமியர்கள் வெளியூர்களிலிருந்து தமிழகம் வந்துச் செல்கின்றனர். இந்நிலையில் இந்த நபர் காவி உடை அணிந்துகொண்டு வளம் வரும் சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாமி யார் உடையில் சுற்றித் திரிந்த இவரை இரவு நேரங்களில் தர்காவில் உறங்கி வருவதைக் கண்ட தனிப் பிரிவு போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். தீவிரவாத அமைப்புகளிடமிருந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்களால் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் இந்த நபரின் செயல் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அப்துல் வகாப் இலங்கை வழியாகத் தமிழகத்திற்குள் நுழைந்த தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி