ஆப்நகரம்

உஷார்! ஹோட்டல்களில் இப்படியும் ஒரு மோசடி

ரெஸ்டாரண்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்ட பின்பும் பல உணவகங்களில் விலையை குறைக்காமல் கொள்ளை லாபம் பார்த்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

TNN 16 Nov 2017, 4:14 pm
ரெஸ்டாரண்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்ட பின்பும் பல உணவகங்களில் விலையை குறைக்காமல் கொள்ளை லாபம் பார்த்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
Samayam Tamil estaurant gst decrease from 18 to 5 but till more price
உஷார்! ஹோட்டல்களில் இப்படியும் ஒரு மோசடி


ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட நாளில், 250 பொருட்களுக்கு 28 சதவிகித வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், படிப்படியாக அந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் கவுகாத்தியில் நடைபெற்ற 23வது, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 178 பொருட்கள் மீதான 28 சதவீத வரி விகிதம் குறைக்கப்பட்டது. ஜிஎஸ்டியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான மாற்றங்களால் ரெஸ்டாரண்டுகளில் இன்று முதல் உணவு பொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. தற்போது ரெஸ்டாரண்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறைப்படி, ஏசி, ஏசியற்ற ரெஸ்டாரண்டுகள் என்று தரம் பிரித்து இனி ஜிஎஸ்டி விதிக்கப்பட மாட்டாது. அனைத்து வகை ரெஸ்டாரண்டுகளுக்கும் இனிமேல் 5 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டுமே விதிக்கப்படும்.


ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவுக்கு இந்திய ஹோட்டல் உரிமையாளர் சங்கம் வரவேற்பு அளித்துள்ளது. அதேநேரம், ரெஸ்டாரண்ட் தொழிலுக்கு இனிமேல் இன்புட் டாக்ஸ் கிரெடிட் வசதி கிடையாது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ரெஸ்டாரண்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்ட பின்பும் பல உணவகங்களில் விலையை குறைக்காமல் கொள்ளை லாபம் பார்த்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அடுத்த செய்தி