ஆப்நகரம்

திமுக கூட்டணியில் கமல்ஹாசன்: அஸ்திவாரம் போட்டதை அறிவித்த இளங்கோவன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்தார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 23 Jan 2023, 11:13 am
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார். இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
Samayam Tamil kamalhaasan mk stalin


அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், “திமுக கூட்டணியில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு காங்கிரஸுக்கு கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். காங்கிரஸ் இடைத் தேர்தல் வேட்பாளரை தேர்ந்தெடுத்தது தொடர்பாக திமுக யோசனை தெரிவித்ததாக நான் நினைக்கவில்லை. காங்கிரஸ் மேலிடம் என்னை வேட்பாளராக அறிவித்தது.

வேட்பாளர் அறிவிக்கும் முன்பாகவே திமுக பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. அமைச்சர்கள் முத்துச்சாமி, கே.என்.நேரு ஆகியோர் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.
அரசு மருத்துவமனையில் டோக்கன் 100 ரூ: அம்பாசமுத்திரத்தில் அட்ராசிட்டி!
திமுக முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தேன். இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வர வேண்டும் என்று முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தேன். அவர் வருவார், வரவேண்டும்.

இன்றைய தினம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை சந்தித்து ஆலோசிப்பேன். அதன் பின்னர் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கோருவேன்.

அதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்தும் ஆதரவு கோர உள்ளோம்.
எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு, காங்கிரஸ் பேரியக்கத்துக்கு, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு பணியாற்ற நல்ல வாய்ப்பு கிடைத்ததாக கருதுகிறேன்” என்று கூறினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அண்மையில் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார். ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையிலும் பங்கெடுத்தார். இருவரும் கலந்துரையாடிய வீடியோவும் வெளியானது. இந்த நிகழ்வுகள் மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியானது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகி வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கூட்டணியில் இல்லாத கட்சியிடம் சென்று ஆதரவு கோருவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவித்துள்ள நிலையில் கூட்டணிக்கான அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி