ஆப்நகரம்

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி தேர்வு: ஓபிஎஸ்க்கு வாய்ஸ் அவ்வளவு தானா?

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 11 May 2021, 8:15 pm
கடும் போலீஸ்பாதுகாப்புடன் நடந்துமுடிந்துள்ளது அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம். ஆட்சியைப் பறிகொடுத்த அதிமுகவுக்கு 65 எம்.எல்.ஏக்கள் கிடைத்துள்ளனர். திமுகவுக்கு அடுத்தபடியாக அதிக எம்.எல்.ஏக்களை அதிமுக பெற்றுள்ளதால் எதிர்க்கட்சித் தலைவராக அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரே தேர்ந்தெடுக்கப்படுவார் எனும் நிலையில் மே 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரு தரப்புக்குமிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மாறாக தொண்டர்கள் மத்தியில் கைகலப்பே ஏற்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் யார்? எடப்பாடி கை ஓங்குகிறதா? அதிமுகவுக்குள் நடப்பது இதுதான்!

இதனால் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் மீண்டும் நடைபெற்றது. இன்றைய கூட்டத்திலும் கைகலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் போலீஸார் அதிமுக அலுவலகத்தில் குவிக்கப்பட்டனர்.

இன்றையக் கூட்டத்திலும் ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்புக்கும் கடும் வார்த்தைப் போர் நடைபெற்றது. அதிமுக இம்முறையும் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதனால் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகமாக இருந்தது.

கொங்கு மண்டலம் என்றால் முன்னாள் சபாநாயகர் தனபாலை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதற்கும் எதிர்ப்பு கிளம்பியதால் ஓபிஎஸ் கூட்டத்திலிருந்து கோபித்துக் கொண்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் முடிவு எட்டப்படாமலே கூட்டம் நிறைவடைந்தது.

ரேஷன் அட்டைக்கு 2000ரூ: இன்று இல்லை, எப்போது தெரியுமா?


மாலை யார் எதிர்க்கட்சித் தலைவர் என அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டம் நிறைவடைந்த சிறிது நேரத்திலேயே எடப்பாடி பழனிசாமிதான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுகப்பட்டதற்கான கடிதம் சட்டப்பேரவைச் செயலரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் வழங்கினர்.

இதனால் மீண்டும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியுள்ளது.

அடுத்த செய்தி