ஆப்நகரம்

ராஜீவ் கொலை கைதி முருகன் சிறையில் 5வது நாளாக உண்ணாவிரதம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், வேலூர் மத்திய சிறையில் இன்று ஐந்தாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Samayam Tamil 6 Feb 2019, 12:52 pm
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், வேலூர் மத்திய சிறையில் இன்று ஐந்தாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
Samayam Tamil ராஜீவ் கொலை கைதி முருகன் சிறையில் 5வது நாளாக உண்ணாவிரதம்!
ராஜீவ் கொலை கைதிமுருகன் சிறையில் 5வது நாளாக உண்ணாவிரதம்!


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, அவரது கணவர் முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை அனுப்பியது.

ஆனால் ஆளுநர் புரோஹித், தமிழக அரசின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதுகுறித்து முருகன் கடந்த 31ஆம் தேதி வேலூர் மத்திய சிறை அதிகாரிகள் மூலம் ஆளுநருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

அதில் ராஜீவ்காந்தி கொலைக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை, வேண்டுமென்றால் உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள். அல்லது கருணை கொலை செய்யுங்கள், இல்லையென்றால் உண்ணாவிரதம் இருந்து சாகவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதனிடையே, சிறையில் நேற்று முருகனை சந்தித்துப் பேசிய அவரது வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏழு பேரின் விடுதலை தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படாததால் முருகன் மனஉளைச்சலில் உள்ளார். மேலும், ஆளுநருக்கு மனு அனுப்பிய விவகாரம் தொடர்பாக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி தொடர்ந்து மனஉளைச்சல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த 2 வாரங்களில் முருகனின் அறையில் 4 முறை சோதனை செய்துள்ளனர். இதனால் முருகன் கடந்த 2ம் தேதி முதல் சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்’ என்று கூறினார்.

முருகன், உண்ணாவிரதம் இன்று 5வது நாளை எட்டியுள்ள நிலையில், அவரது உடல்நிலை சற்று நலிவடைந்துள்ளது. இதனால் உண்ணாவிரதத்தை கைவிடும்படி சிறை நிர்வாகிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி