ஆப்நகரம்

தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு: நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைப்பு!

ஊரடங்கு காலகட்டமான ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர் சில தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக ஆராய குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

Samayam Tamil 16 Apr 2020, 8:13 pm
சென்னை: தொழில்நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக ஆராய நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி


கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர வருகிற மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் பிரதமர் மோடி நீட்டித்துள்ளார். எனினும், ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர் சில பகுதிகளில் தளர்வுகள் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி காணொளியில் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேஎற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளார்களை சந்தித்த அவர், மத்திய அரசு கூறுவதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியது. தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவும் தீவிரம் குறைந்துள்ளது என்றார்.

மற்ற மாநிலங்களை விட முன்னெச்சரிக்கையாக செயல்படும் தமிழகம் - முதல்வர் பழனிசாமி!

கொரோனா தொற்றை தடுப்பதுதான் மிகவும் முக்கியம்; அதைத்தான் அரசு செய்து வருகிறது என தெரிவித்த முதல்வர், தமிழகத்தில் கொரோனாவை தடுக்க 12 குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவு உள்ளன எனவும் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர் சில தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக ஆராய குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் தொழில் கூட்டமைப்பினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி