ஆப்நகரம்

தூத்துக்குடியில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை; ஸ்டெர்லைட் நிர்வாகம்!

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 25 May 2018, 7:42 pm
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
Samayam Tamil Sterlite


தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பி.ராம்நாத், தி இந்து ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அதில், பராமரிப்பு பணிகளுக்காக ஆலை மூடப்பட்டு உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழவில்லை. போராட்டங்கள் திடீரென ஏற்பட்டுள்ளன. இதன் பின்னால் தூண்டுதல் இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்களுக்கு பணம் வருகிறது.

அவற்றை வன்முறைக்கு திருப்பிவிட முயற்சிக்கின்றனர். இதற்கு சட்டப்பூர்வமாக தீர்வு காண முயற்சிக்கிறோம். வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக யோசிக்கவில்லை.

20 ஆண்டுகளுக்கு முன்னதாக நாங்கள் தூத்துக்குடிக்கு வந்ததற்கு காரணம் உள்ளது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை.

வேறு மாநிலங்களில் அமைக்க இடம் கிடைத்தது. ஆனால் அங்கு செல்லவில்லை. இங்கு இருக்க வேண்டும் என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று பி.ராம்நாத் தெரிவித்துள்ளார்.

Exiting Thoothukudi not on the cards says Sterlite.

அடுத்த செய்தி