ஆப்நகரம்

தற்கொலை செய்துகொள்ள அனுமதியுங்கள்: ஒதுக்கப்பட்ட குடும்பத்தினர் உருக்கமான மனு!

தூத்துக்குடி மாவட்டம் நக்கலக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த சகோதரர் இருவர், ஊர் நிர்வாகத்தை மீறி சொந்தமாக நிலத்தை விலைக்கு வாங்கினர். இதனால் அவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டனர். இந்நிலையில் மனமுடைந்த குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 Sep 2019, 12:15 pm
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊர் நிர்வாகத்தை மீறி நிலம் வாங்கியதால் ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர், தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு கோட்டாட்சியரிடம் மனு அளித்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு குடும்பத்தினர் மனு!
ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு குடும்பத்தினர் மனு!


தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் ஊராட்சிக்குட்பட்ட நக்கலக்கட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தல்ராஜ், அவரது சகோதரா் வேல்சாமி. இருவரும் விவசாயம் செய்வதற்காக அதே பகுதியைச் சோ்ந்த ராஜசேகரன் என்பவரிடம் கடந்த ஜூலை மாதம் 7 ஏக்கா் நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளனர்.

இதற்கு சில நாட்களுக்கு முன்புதான், ராஜசேகரனிடமிருந்து, தனி நபா்கள் யாரும் வாங்கக் கூடாது என ஊர் நிர்வாகம் முடிவு செய்து உத்தரவு பிறப்பித்தது.

தந்தை கொண்டு வந்த சட்டத்தில் மகன் கைது- இந்தியாவில் இப்படியொரு வினோதம்!

இந்நிலையில், முத்தல்ராஜ், வேல்சாமி ஆகியோர் உத்தரவை மீறி, நிலத்தை விலைக்கு வாங்கியதால் அவா்கள் குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து, ஊர் நிர்வாகத்தினர் தீர்ப்பளித்தனர். இதனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 25 போ் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அருகே உள்ள எட்டயபுரம் மற்றும் கீழஈராலுக்குச் செல்ல வேண்டிய அவலநிலையில் உள்ளனர்.

இதுதொடர்பாக எட்டயபுரம் காவல் நிலையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த குடும்பத்தினர், நேற்று கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு வந்து, தங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் எங்களை குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என கோட்டாட்சியா் விஜயாவிடம் மனு அளித்தனா்.

உங்கள் சொற்களே எங்களுக்கு ஆயுதம்: முக ஸ்டாலின் ட்வீட்!!

மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு குடும்பத்தினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

இன்றைய நாயகன் பெரியார்: பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

அடுத்த செய்தி