ஆப்நகரம்

ரஜினிகாந்த் 71: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ரஜின்காந்தின் 71ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Samayam Tamil 12 Dec 2020, 6:54 am
ரஜினிகாந்தின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil rajinikanth


வழக்கமாக ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அவரது வீட்டின் முன் திரளாக கூடுவர். சில சமயங்களில் ரஜினிகாந்த் வெளியேவந்து ரசிகர்களைப் பார்த்து கை அசைப்பார். இந்த முறை அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக உறுதியளித்துள்ள நிலையில் அதிகளவிலான ரசிகர்கள் போயஸ் கார்டனை நோக்கி படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பில் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் தனது வீட்டிற்கு வரவேண்டாம், தான் பெங்களூர் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ரஜினியின் பிறந்தநாளுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து..!

இருப்பினும் ரசிர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வீட்டின் முன் குவிந்தனர். அங்கு நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடினர்.

திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனபலரும் ரஜினிகாந்திற்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். #HBDSuperstarRajinikanth ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தேசிய அரசியலில் ஸ்டாலினுக்கு முக்கியப் பதவி!

வழக்கமாக ரஜினியின் பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் கோ பூஜை, கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்வார்கள். இந்த முறை ரஜினிகாந்த் அரசியலில் இறங்கி சில மாதங்களில் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் இவை அதிகளவில் நடைபெற வாய்ப்புள்ளன.

அடுத்த செய்தி