ஆப்நகரம்

2021ல் விஜய் அண்ணா ஆட்சி: கொளுத்தி போட்ட விஜய் ரசிகர்கள்!

2021ல் விஜய் ஆட்சி என திருச்சியில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.

Samayam Tamil 23 Oct 2020, 10:28 pm

தமிழகத்தின் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி இப்போதே தேர்தல் களம் சூடாக தொடங்கியுள்ளது. அண்மைக்காலமாக நடிகர்கள் அரசியலில் களமிறங்கி வரும் நிலையில், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என்று பேசப்பட்டது.
Samayam Tamil விஜய் ரசிகர்கள் போஸ்டர்


இதுஒருபுறமிருக்க, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பாஜகவில் இணையப்போவதாகவும் சில தகவல்கள் வெளியாகின. இதற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பாஜகவில் இணையப்போகிறோம் என்ற கருத்துக்கே இடமில்லை. மக்கள் அழைக்கும்போது விஜய் அரசியலுக்கு வருவார்.

விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும். நடிகர்களின் சுதந்திரத்தை தடுக்க முடியாது. எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது. அதை வலுப்படுத்துகிறேன்” என்று கூறினார்.

ரெடியாகும் தனிக்கட்சி; நடிகர் விஜய்யின் அடுத்த பிளான் - எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு!

அண்மையில் மதுரையில் விஜய் ரசிகர்கள், “2021ல் தளபதி விஜய் அண்ணாவின் ஆட்சி” என்று போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். மேலும், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவை எம்ஜிஆர், ஜெயலலிதாவாக சித்தரித்து விஜய் மக்கள் இயக்கத்தினர் மதுரையில் போஸ்டர் ஒட்டினர்.

விஜய்யும் திரைப்படங்களில் மட்டுமல்லாமல், இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் மறைமுகமாக அரசியல் பேசி வருகிறார். இந்நிலையில், தற்போது திருச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டியுள்ள போஸ்டரில், “2016 வரை சட்டமன்ற தேர்தலில் இருபெரும் தலைவர்களை கண்ட தமிழகம்.

தற்போது உள்ள வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே! நாளைய தமிழக முதல்வரே! 2021ல் உங்கள் தலைமையில் ஆட்சி அமையட்டும். தமிழகம் மகிழ்ச்சியில் மலரட்டும்” என்று கொளுத்தி போட்டுள்ளனர்.

அடுத்த செய்தி